பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 செலுத்துவதில் அவனுக்கு நல்ல திறமையிருந்தது. சிறிய படகுகளில் அவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு செல்லும்போது அவனே பெரும்பாலும் வெற்றி யடைந்தான். தபால் தலை சேகரிக்கும் பையன் வேருெரு மலைக்குச் சென்றிருக்தான். பெஞ்சமின் கொஞ்சம் இளைத் திருந்தாலும் முற்றிலும் குணமடைந்து விட்டான். அக்டோபர் மாத ஆரம்பத்தில் பூஜை நாள் வந்தது. தியானம் செய்யவேண்டிய நாள் அது, எல்லாவற்றிற்கும் அன்று ஆசீர்வாதம் கிடைக்கும். மோட்டார்க்காருக்கு மாலை அணிந்து அதன் முன்னுல் பழங்களையும் மலர்களேயும் படைப்பார்கள். பெஞ்சமினுடைய தள்ளுவண்டியும் ஆசீர் வாதம் பெற்றது. அவனுடைய ஆயாவான மேரி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளாயினும் அதைச் செய்விக்காம லிருக்க விரும்பமாட்டாள். நல்ல கிழப் புரோகிதன் ஒருவன் ஒரு சில ரூபாய்களைக் கேட்டு வாங்கிக் கொண்டு அதைச் செய்தான். ஆஸ்பத்திரியும், அதன் அறைகளும் அதேமாதிரி ஆசீர்வதிக்கப் பெற்றன. முக்கியமாக ரணசிகிச்சை செய்யும் அறை, எக்ஸ்-கதிர் கிழற்படம் எடுக்கும் பகுதி யும் வாழ்த்துப் பெற்றன. அது ஒரு விடுமுறைகாள். இந்துப் பஞ்சாங்கத்தின்படி கிறைய விடுமுறைகள் உண்டு. அநேக மாக ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை உற்சாகமற்றதாக இருப்பதால் இவ்வாறு விடுமுறைகள் இருக்கின்றன என்று ஜூடி கருதினுள். சிரமப்பட்டு வேலை செய்தும் கிறையப் பணம் கிடைப்பதில்லை. வெகுபேர் ஞாயிறன்றுகூட ஓய்வு பெறுவதில்லை. அதனுல் அவர்களுக்குக் கொஞ்சம் தமாஷாக இருக்க இத்தனை விடுமுறைகள் தேவைபோலும் என்று அவள் எண்ணிக்கொண்டாள். ஆனல் மனத்திற்குப் பிடித்தமான வேலையுள்ளவர்களுக்கு உண்மையில் இந்த