பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. காஞ்சிபுரம் அவர்கள் மலையிலிருந்து திரும்பிவந்த காலத்திலும் வெப்பமாகவே இருந்தது; ஆனல் அவ்வளவு ஈரம் இல்லை. முதல் மழைப்பருவம் முடிந்து விட்டது; இரண்டாவது மழைப்பருவம் இன்னும் வரவில்லை. அடுத்த விடுமுறையான தீபாவளியில் என்ன செய்வது என்பதுபற்றிப் பள்ளிக் கூடத்தில் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டனர். கடை களில் - உங்கள் தீபாவளிப் பரிசு’ என் று பொருள்களைக் காட்சியாக வைக்க ஆரம்பித்துவிட்டனர். கிறிஸ்து மலாக்கு ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் கடைபெறு வதுபோலவே இது இங்கு கடந்தது. கடைகளுக்குச்சென்று வாங்குவதற்கு இது ஒரு சாக்கு மிகுந்த ஏழைகளுங்கூட ஏதாவது புதிய உடையைப் பெற முயற்சி செய்து பெற்று அணிந்து கொள்வார்கள். யாராவது பணக்காரர் கழித்துக் கொடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை. ஆயாவுக்கும், வாசுகிக்கும், ஜார்ஜின் மனைவிக்கும் புதிய சேலைகள் வாங்க ஜூடி தன் தாயுடன் சென்ருள். ஜார்ஜின் மனைவி சில சமயங்களில், பின்னல் இரண்டு குழந்தைகள் பற்றிக் கொண்டுவர இடுப்பில் ம ந்ருெரு குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவாள்.