பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I தும் விலகி விலகிப் போகிறதுபோல என்னவோ மாதிரி இருந்தது. தான் சென்றுவந்த இடத்தைப் பற்றியும், ஏரியி லிருந்த படகுகளைப் பற்றியும் விவரமாக அவளுக்குச் சொல்ல ஜூடி எண்ணியிருந்தாள். எப்படியோ அது கடைபெறவில்லை. ஒருவேளை எல்லாம் சரியாகப் போய் விடும். அம்மணிப்பாட்டியுடன் போகலாம் என்று ஜூடியின் தாய் சொன்னுள். ஆனல் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னுல் எப்பொழுதும் மிதியடிகளைக் கழற்றிவிட மறந்து போகக் கட்டாது. 'காஞ்சீபுரத்திலே நூற்றியெட்டுக் கோயில்களிருக்கின்றன. அம்மணிப்பாட்டி அவற்றில் சில வற்றிற்காவது போக விரும்புவாள்' என்றும் அவள் எடுத்துச் சொன்னுள். அதிகாலையிலேயே அவர்கள் புறப்பட்டு வெய்யில் மிகக் கடுமையாவதற்கு முன்னல் பரங்கிமலையைத் தாண்டி ஒரு காட்டுப்புறச்சாலையில் போய்க்கொண்டிருந்தார்கள். கார் ஒட்டும் இளைஞன் ஏதோ ஒருவகையில் தம்பி முறை யுள்ளவன். ஆடுமாடுகளுக்கு மிகப் பக்கத்திலேயே கோஞ்சிக்கொண்டு போகும்படியாக அவன் காரைச்செலுத் தியதால் ஜூடி ஓரளவு பதற்ற மடைந்தாள். அவன் அடிக் கடி மோட்டார் ஹார்னே அடித்தான். சில சமயங்களில் குரங்குகள் பாதையில் இருக்கும்; பழத்துக்காகவோ வேறு பொருளுக்காகவோ அவை சண்டையிட்டுக்கொண்டிருந்த போது அருகில் நெருங்கும் வரையிலும் அவை வழியை விட்டு விலகவில்லை. கடைசியில் காஞ்சிபுரத்திலுள்ள கோபுரங்கள் அவர் களுக்கு முன்னல் துரத்திலே தெரியலாயின. அவற்றைத் தூபி என்று சொல்ல முடியாது. அவை ஒரு பக்கத்தை