பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常3 தலையுடன் கூடிய கனேசர் இவர்களுடைய உருவங்களும் இருந்தன. பார்வதி, லட்சுமி ஆகிய பெண் தெய்வங்களும் இருந்தனர். அவர்களுடைய பெயர்களையே ஜூடியின் தோழிகளில் மிகப் பலருக்கு வைத்திருந்தனர். மண்டை யோடுகளை மாலையாக அணிந்து கொண்டும், நாக்கை வெளியே நீட்டிக்கொண்டும் காளி பயங்கரமாகத் தோற்ற மளித்தாள். சுற்றுப் பிராகாரத்திலே இவர்களின் வடிவங் களெல்லாம் செதுக்கப்பெற்றிருந்தன. இந்துக்களுக்கு இவர்களைப் பற்றி ஏராளமான கதைகள் தெரியும். முடி வின்றி அக்கதைகள் படத்திலும் பாட்டிலும் திரும்பத் திரும்ப வரும். கோயிலுக்குள்ளே கடவுளுக்காக ஒரு பீடம் உண்டு. இறைவன் அல்லது இறைவி அல்லது அவர்கள் இரண்டு பெருடைய சிறிய உருவங்கள் அங்கி ருக்கும். சாமந்தி மலர் சாற்றிய அவை எண்ணெயும், புழுதியும் தூமப்புகையும் படிந்து கறுப்பாகத் தோன்றும். சில சமயங்களில் அவற்றிற்கு ஆடையும், துணிகளும் புனைந்திருப்பார்கள். ஜூடியைப் பார்த்துக்கொள்ளும்படி ஓர் அர்ச்சகரிடம் கூறிவிட்டு அம்மணிப்பாட்டி சில கோயில் களின் உட்பகுதிச் சென்ருள். கெற்றியிலே திருநீற்றை இட்டுக்கொண்டும், பூ அல்லது தேங்காய் மூடியுடனும் அவள் வெளியே வந்தாள். அவள் உள்ளே என்ன செய்தா ளென்று கேட்க ஜூடி விரும்பவில்லை. அப்படிக் கேட்டி ருக்தாலும் அம்மணிப்பாட்டி அதைப் பற்றிக் கவலைப்பட் டிருக்கமாட்டாள் என்ற உணர்ச்சி அவளுக்கேற்பட்டிருந் தது. தெய்வங்களின் பிரார்த்தனை யென்பது நடைமுறையி லுள்ள சாதாரணமான விஷயம் என்று அனைவரும் சிநேக பாவமான முறையில் ஏற்றுக்கொண்டிருக்கிருள்கள். அதிலே பய உணர்ச்சியே இல்லை. ஆளுல் கடுமையான வெய்யில் . கோயிலைச் சுற்றி வருவது மிகவும் சிரமம்.