பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


75 இவ்வாறு செய்து அவர் வெற்றியடைந்தார். பார்வதி பெண்ணுகையால் அவரைப்போலவே செய்ய முடியவில்லை. அதோ பார், பார்வதி சிவனைப் பார்த்துக்கொண்டிருக்கிருள். உண்மையில் அவளுக்கு மகிழ்ச்சிதான், அவள் புன்சிரிப் போடிருக்கிருள், பார்” என்று அம்மணிப்பாட்டி கடறினுள். விளையாட்டாக இவ்வாறு செய்யக் கூடியவையும், தெய்வங் களுக்கும் விளையாட்டு ஓரளவு முக்கியமென்று எண்ணு பவையுமான தெய்வங்கள் இருப்பது கல்லதென்று ஜூடி கருதினுள். அப்பா, ஒரே வெய்யில் மே ட் டார் க் காரை கிழலில் கிறுத்தியிருந்தாலும் கதவைத் தொட்டால் சுட்டது. அம்மணிப்பாட்டி ஜூடியை வா என்று கடறி துணிக்கடைக்குள் அழைத்துக் கொண்டு போளுள். உடனே ஒரு ஆள் சேலைகளை எடுத்துக்கொண்டு வந்து மேஜையின் மேல் வீசி வீசிக் குவித்தான். கல்ல காப்பியும் கொண்டுவந்தான். தங்க ஜரிகை கிறைய உள்ள கல்யாணச் சேலைகளும், கட்டம்போட்டதும், பின்னல் வேலே செய்ததும், மீன்போலவும் யானைப்போலவும் கரை போட்டது மான எல்லா நிறப் பட்டுத் துணிகளும் அங்கிருந்தன எல்லாம் அழகாக இருந்தன. மேகவர்ணப் பட்டுத் துணிகள் ஜூடிக்கு முக்கியமாகப் பிடித்தன. வேலைக்காரிகள் அன வருக்கும் பருத்தி நூலால் கெய்த சேலைகளும், லட்சுமிக்கு இளவாழையிலே போன்ற பச்சை நிறத்தில் பட்டும், சரசுவதிக்கு வெண்ணெயின் இளமஞ்சள் நிறத்திலே பட்டும், இரண்டு வயதான பார்வதிக்குப் பாவாடை தைக்க அச்சிட்ட பட்டுத்துணியும் அம்மணிப்பாட்டி வாங்கிளுள். பிறகு அவள் தன் கணவருக்குச் சிறிய தங்க ஜரிகைக் கரையுள்ள மென்மையான வேட்டிகள் வாங்கினுள். பல பேர் அங்கே சேலைகளைப் பார்த்துத் தேர்ந்து எடுத்துக்