பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77 வீதிகளிலே எல்லா கிறங்களையுமுடைய பலவிதமான பழங்களேயும், மளிகைச்சாமான்களையும் விற்கும் கடை களிருந்தன; தாழ்வான தாழ்வாரங்களையும் செதுக்குவேலே செய்யப்பெற்ற பெரிய கதவுகளையுமுடைய வீடுகளும் இருந்தன. ஒரு பெரிய கதவு வழியாக அவர்கள் சென்றனர் அங்கே ஒரு முற்றம் இருந்தது. சுற்றிலும் தறிகளிலே அமர்ந்து மெல்லிய நூலக்கொண்ட நெசவு நாடாக்களைக் குறுக்கே ஒட்டி கெய்து கொண்டிருந்தனர். சில சமயங் களில் ஒரே தறியில் இரண்டுபேர் வேலை செய்தனர் ஒருவன் சேலையின் கரையை நெய்தான்; மற்ருெருவன் மற்ற பகுதியை நெய்தான். தறிகளெல்லாம் எளிமையாகத் தோன்றின. அவற்றிலிருந்து பாரக்கற்கள் குழிகளுக்குள் தொங்கின. நீண்டபாவு நூலே அசட்டையாக முடி போட்டு விட்டிருப்பதுபோலத் தோன்றிற்று. ஆனல் வேண்டிய அளவு இழுவிசையைக் கொடுப்பதிலும் உருவங்களே அமைப்பதிலுமே திறமை வெளிப்பட்டது. நெசவாளிகள் நல்ல தோற்றத்தோடிருந்தனர்; அவசரப்படாமல் வேலை செய்தனர். படித்த பாங்குக் குமாஸ்தாக்களேவிட இவர்கள் கல்ல ஊதியம் பெறுவதாக அம்மணிப்பாட்டி ஜூடிக்குச் சொன்னுள். தங்தையரோடு வேலை செய்யும் சிறு பையன் களுக்கும் கல்ல ஊதியம் கிடைத்தது. செய்யும் வேலை அவர் களுக்குப் பிடித்திருப்பதுபோல கிச்சயமாகத் தோன்றிற்று: அங்கிருந்து அவர்கள் சலவைக்கல் பரப்பப்பட்ட ஒரு சிறிய அறைக்குச் சென்ருர்கள். அங்கே அவர்களுக்குக் குளிர்ந்த இளநீரில் கொஞ்சம் எலுமிச்சம்பழ ரசம் விட்டுக் கொடுத்தனர். அவ்விடத்தில் தங்க ஜரிகை நூலைக் கால் களுக்கிடையே வைத்து நூற்புக்கழியில் சுற்றிக் கொண்டு மிருந்தனர். அது உண்மையில் ஒரு மெல்லிய பட்டுநூலே, அதன் மேல் வெள்ளிமுலாம் பூசிப் பிறகு மிக இலேசாகத்