பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 தன் தாயார் செய்த பண்டங்களை அடுத்த வீட்டு வசக்தி கொண்டு வந்தாள். அவள் அவற்றை ஒரு பெரிய இலையில் வைத்து, மஸ்லின் துணியால் மூடி, பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்காக அதற்குமேல் சில மலர்களை வைத்து எடுத்து வந்தாள். தீபாவளிப் பட்சணங்களைக் கடையிலிருந்து வாங்குவது முற்றிலும் தவறு என்று கலியாணமான இந்தியப் பெண்களில் பெரும்பாலோர் கருதியிருந்தனர். வழக்கமாக அவர்கள் பட்சணம் தயாரிக்கத் தனிப்பட்ட முறைகளைக் கையாண்டனர். அவற்றைப்பற்றி அவர் களுக்கு மிகுந்த பெருமை. லட்சுமியை மறுபடியும் ஜூடி பார்ப்பதற்குள் அநேக மாகக் கார்த்திகையே வந்து விட்டது. அதற்குள் வீடுகளி லெல்லாம் கதவுகளுக்கு வெளியிலும், ஜன்னல் ஓரங் களிலும், தாழ்வாரங்களிலும் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைக்கத் தொடங்கிவிட்டார்கள். சில இடங்களில் பலவகையான வர்ணங்களுள்ள மின்சார விளக்குகளைக் கோத்துவைத்துப் பெரிய அலங்காரங்கள் செய்திருந்தனர். ஆளுல் இளங்காற்று சிறிதே வீசுகின்றபோதும் நீண்டு ஆடி ஒளிவிடும் சிறிய மண் விளக்குகளைப்போல அவை அவ்வளவு அழகாக இல்லை. விளக்கு மாலைகளால் அலங் கரிக்கப் பெற்றதால் அழகற்ற வீடுகளும் கொஞ்சம் அழகாகத் தோன்றின. ஆளுல் கார்த்திகைக்குள் விடுமுறை உணர்ச்சி மெதுவாக மங்கிவிட்டது. படார், படில்’ என்று கடைசி முறையாகச் சத்தம் செய்துவிட்டு வாணவெடி களும் முடிவடைந்தன; பள்ளிக்கட்டங்கள் மீண்டும் திறந்தன. வயது வந்தவர்கள் தங்கள் வேலையை கவனிக்கச் சென்றனர். இந்த வருஷத்திற்குத் தீபாவளி முடிந்தது. நீந்துவதற்காக ஜூடி தன் தங்தையுடன் கிளப்புக்குச் சென்ருள். அவள் குனிக்கும் உடையை அணிவதற்குக்