பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87 என்று சொல்லிவிட்டு லட்சுமி தன் தோனே ஜூடியின் பக்கம் திரும்பினுள். 'ஓ, அவள்தான் காரணம்: லட்சுமி, அவள் ஒரு மூடக் கழுதை, இதைவிட வடக்கு அழகானதென்று கம்பவில்லை. அப்படிச் சொல்வது ஹரிதாஸின் கும்றமல்ல; என் குற்றமு மல்ல...” என்ருள் ஜூடி. ஆணுல் லட்சுமி அதற்குச் செவி சாய்க்கவில்லை; அவள் முன்பே தீர்மானம் செய்துகொண்டுவிட்டாள். 'டெல்லியிலிருந்து எங்களே ஆள முயற்சி செய்துகொண் டுள்ள இவர்கள்தான் எங்களே இழிவாகக் கருதுகிருச்கள்; ஆனல் அப்படி ஆள நாங்கள் விடப்போவதில்லை; பிரிட்டிஷ் காரராகிய நீங்கள் ஆண்டதே மோசம்-ரொம்ப மோசம். இவர்கள் ஆள முடியுமென்று கினைத்தால்-பிறகு தெரிந்து கொள்வார்கள். காங்கள் இந்த ஹிந்தியைப் பேசவேண்டு மென்று சொல்லுகிருர்கள்: உங்களைவிட இவர்கள் மகா மோசம்!” அம்மம்மா, இது பயங்கரமான அரசியல்-அவள் மிகைப்படுத்திக் கடறுகிருள்-அவளே எப்படிப் பேசாடி லிருக்கக் செய்வதென்று தெரியவில்லை என்று இவ்வாறு ஜூடி எண்ணமிடலானுள். ஐஸ்கிரீமைச் சாப்பிட்டு முடிக்காமல்கட்ட லட்சுமி மேஜையைவிட்டு எழுந்து வாயை இறுக முடிக்கொண்டு போய் விட்டாள். பரதநாட்டி யத்திலே புலியைப் போன்ற மூர்க்கமான பகுதியை அவள் எப்படி அபிநயம் பிடித்தாள் என்பதைத் திடீரென்று ஜூடி சிந்தித்தாள். அவளிடத்திலே லட்சுமி இப்படிப் புலியாக இருப்பதென்ருல் ஜூடியின் கண்களிலிருந்து சூடான இரண்டு பெரிய கண்ணிர்த்துளிகள் பிதுங்கித் தளஒடு களின் மீது தெறித்து விழுந்தன. குளிப்பதற்கான உடை