பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. தில்லை. வேறு மிஷன்களில் பெரும்பான்மையானவை மக்களே இந்துக்களாக இருப்பதைவிட்டு மதமாற்றம் செய்ய விரும்புகின்றன. அது இந்தியாவில் நியாயம் என்று கான் கருதவில்லை. அதனல் அவற்ருேடு சேர்ந்து வேலை செய்ய நான் விரும்பவில்லை” என்ருள் அவள். 'முட்டாள்தனமான மிஷன்கள்!” என்ருள் ஜூடி. ஒரு நாள் காலையில் பெஞ்சமின் குதுகலத்தோடு கூச்சலிடுவதைக் கேட்டுக்கொண்டே ஜூடி உறக்கத்தி லிருந்து எழுந்தாள். உள்ளே மடித்துவிடப்பட்டிருந்த கொசுவலையை விலக்கிக் கொண்டு அவன் எழுந்து மேல் மாடியிலிருந்து கீழே இறங்கிப் போயிருக்கிருன். தோட்டத் திலே அழகான குட்டைகளாகத் தண்ணிர் தேங்கியிருப் பதை அவன் கண்டான். தோட்டக்காரனை ஏமாற்றிக் கொண்டு உடம்பிலே துணியேயில்லாமல் அவன் அந்தக் குட்டைகளில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தான். சென்ற இரவு இடித்த இடியானது மழையைக் கொண்டு வந்திருக்கிறது. தழைகளும் மலர்களும் மழையால் கழுவப்பட்டுத் தோட்டம் எவ்வளவு அழகாக இருந்தது! ஆளுல் கதிரவன் மறுபடியும் .ே த ன் றி ய து ம் எத்தனை பூச்சிகள்! உடனே வெப்பமும் ஆரம்பித்து விட்டது. சிவப்பு நிறமான சேற்றுத் தண்ணிரைத் தெறித் துக்கொண்டிருப்பது முதலில் பெஞ்சமினுக்கு வேடிக்கை யாக இருந்தது. ஜூடிக்கும் ஓரளவு வேடிக்கைதான். ஆனல் சீக்கிரத்தில் அவர்கள் வியர்த்துப்போளுர்கள். உடம் பெல்லாம் பிசுபிசுப்பை உண்டாக்கும் வெயில் அது. பிற்பக லுக்குள் தண்ணிரெல்லாம் வற்றி மண் தான் இருந்தது. ஏதாவது ஒருவகையிலே வீட்டிற்குள்ளே நிறைய மண் சேர்ந்துவிட்டது. பெஞ்சமினுடைய கால் தாரையாகவே பெரும்பாலான மண் உள்ளே வந்திருந்தது.