பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
13
 

முகம் மலரக் கூறினாள். வைரத் தோடு போட்டு அம்பிகையை அலங்கரிக்க வேண்டும் என்ற தன் ஆசையையும் ஆர்வத்துடன் கூறினாள். வைரத்தோடு என்றதும், அவர் வீட்டில் இருக்கும் வைரக்கற்கள் தான் அவருக்கு நினைவு வந்தது.

அந்த வைரக் கற்கள் அவருக்கு பரம்பரைச் சொத்தாகும். பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வரும் வைரக் கற்களினாலேயே அம்பிகைக்கு வைரத்தோடு அணிவிக்க வேண்டும் என்று அவரும் ஆசைப்பட்டார்.

‘தேவிக்கில்லாத சொத்தா! என்று மீனாட்சியைப் பார்த்து சந்தோஷத்துடன் கூறினார்.

எப்படியும், இனி ஒரு மாதத்திற்குள், நீ நினைத்தது போலவே அபாரமாக செய்து விடுகிறேன். கவலையை விரட்டி விட்டு, களிப்புடன் நீ இருக்க வேண்டும்’ என்று கணவர் கூறியதும், மீனாட்சிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. குறையெல்லாம் போனது போலவும், குழந்தை கிடைத்தது போலவும் மீனாட்சி எண்ணி மகிழ்ந்தாள். நெஞ்சத்தில் நிம்மதி அடைந்தாள்.