பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

19


தருமலிங்கத்தின் குரல் தணிந்தது. கனிந்துபோய் கம்மியது. கண்களிலே கண்ணீர் கசிந்தது. மிகவும் வேதனையுடன், தன் தோளில் கிடந்த துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார். பெருமூச்சு வெகுவேகமாக வெளிவந்தது.

‘கடவுள் உங்களைக் கைவிடமாட்டார்! கவலையை விடுங்கய்யா’ என்று ஆதரவாகப் பேசினார் நடேசன்.

அந்த நம்பிக்கையுடன் தான் நம்ம ஊர் அம்பிகைக்கு ஒரு வைரத் தோடு செய்யவேண்டுமென்று நான், இப்பொழுது உன்னை அழைத்து வந்தேன்.

அம்பிகை தன்னை நிச்சயம் கைவிட மாட்டாள் என்ற நம்பிக்கையில் தருமலிங்கம் பேசிக்கொண்டிருந்தார். ‘எப்படியும் தன் பெயர் சொல்ல, தன் குலம் தழைக்க அம்பிகை அருள் செய்வாள்’ என்று அவரது உள்மனம் கூறியதால், அவர் கண்கள் கண்ணீரால் பளபளத்தன.

‘வைரத்தோடுதானே? இன்னும் ஒரே மாதத்திற்குள் முடித்து விடுகிறேன். இதைவிட வேறு