பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

25


‘வீட்டை விட்டுப் போகும் பொழுது, மகிழ்ச்சியுடன் போனிங்க, வருகிறபொழுது, எதையோ பறிகொடுத்தவர் மாதிரி வந்திருக்கிறீங்க’ என்று கேலியாகக் கேட்ட பார்வதியிடம், தான் பெற்ற முன் பணக் கூலியைக் கொடுத்தார் நடேசன்.

ஆவலுடன் வாங்கிய பார்வதி, அவசரம் அவசரமாகத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவளது குழி விழுந்த கண்கள்கூட், சந்தோஷத்தில் மலர்ந்து பிதுங்கின.

‘ஏதுங்க இத்தனை ரூபாய்?’ ஆச்சரியம் அந்தக் கேள்வியில் கொடி கட்டிப் பறந்தது.

கூலி! ஏக்கத்தின் பெருமூச்சில் நடேசன் வாய்பேசியது.

எதற்குக் கூலி? கொஞ்சம் விளக்கமா சொல்லக்கூடாதா? அவள் பேச்சில் கொஞ்சம் வேகம் இருந்தது.

தருமலிங்கம் வீட்டிலேதான் இனிமேல் வேலை, அந்த வைரத்தோடு வேலையை எப்படித்தான் முடிக்கப் போகிறேனோ, எனக்கே தெரியவில்லை!

அதுதான் கவலையா? உங்கள் கைப்பட்டால் வைரம் கூட வேணுங்கற தினுசிலே