பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

வளைஞ்சிக்குமே! இந்த வட்டாரத்தில் உங்களை விட்டா யார் இருக்காங்க? என்று கணவனின் கைவண்ணத்தைப் புகழத் தொடங்கிவிட்டாள் பார்வதி.

பணமல்லவா நடேசன் தந்திருக்கிறார்! பார்வதியின் புகழ்ச்சிக்கு என்ன குறைச்சல்? கொண்டுபோன தீனியை தின்று தீர்த்தக் குழந்தைகள் எல்லோரும் ஓடி வந்து இருவர் பக்கத்திலும் உட்கார்ந்து கொள்ளவே, இருவர் பேச்சும் தடைப்பட்டது.

ஒரு வாரம் நடேசன் குடும்பம் நிம்மதியாக உண்டு, பசியில்லாமல் உறங்கி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது. பழுத்தமரத்தில் பறவைகள் கூட்டம் கத்துவது போல, அந்தக் குடும்பத்தில் சதா மகிழ்ச்சி சத்தமே நிறைந்து கிடந்தது.

அந்த ஊரில், ஒருவித விஷக் காய்ச்சல் பரவி வந்த நேரம். நடேசனும் அவரது குடும்பத்தாரும் நன்றாக வாழ்வது பிடிக்கவில்லையோ என்னவோ, அந்த விஷக் காய்ச்சல் நடேசன் வீட்டுக்குத் திடீரென்று விஜயம் செய்தது. முதலாவதாக கடைசிக் குழந்தையைக் காய்ச்சல் பிடித்துக் கொண்டு, தொடர் கதை போல ஒவ்வொருவரையும் பிடித்துக் கொண்டது. அது அந்தக் குடும்பத்தையே