பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

37


அடர்த்தியாக பின்னிக் கொண்டு இருந்தன. ஆகவே, அதனை இனி கரும்புக்காடு என்றே கூறலாம்.

பேரூரை அடைய வேண்டும் என்றால், குறைந்தது ஒரு மைல் தூரம் கரும்புக் காட்டிற்குள் நுழைந்துதான் செல்ல வேண்டும் என்பது நடேசனுக்கு நன்றாகத் தெரியும். பகலில் பத்துபேராக சென்றால் பயந் தெரியாது என்பதால், பலர் கூடி சேர்ந்து கும்பலாகவே பேரூருக்குப் போவார்கள்.

நடேசனுக்கோ இப்பொழுது அவசரம், யாரையும் துணைக்கு அழைக்கவோ, சேர்க்கவோ முடியாது. ஏனென்றால் இவர் திருட்டு வேலையல்லவா செய்திருக்கிறார் இருட்டிலே போவதாக இருந்தாலும் யாரையும் துணைக்குக் கூப்பிட முடியாதே! பயந்தவராக இருந்தாலும், இப்பொழுது எப்படியும் போய்த் தானே ஆகவேண்டும் நடேசன் துணிந்து, கரும்புக் காட்டின் வழியே நுழைந்து செல்லத் தொடங்கினார்.

நடுக் காட்டிற்குள் சென்றபொழுது, அவர் கரும்புகள் மீது மோதுகிற சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு புதிய சத்தமும் கேட்கத் தொடங்கியது.