பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விட்டார். சுற்றுப் புறம் எங்கும் இரத்தம் தெளித்ததுபோல் பரவித் திட்டுத் திட்டாகக் கிடந்தது.

மீண்டும் புலி அவரைத் தாக்க முயன்றபொழுது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்ட புலியானது நடேசனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.

துப்பாக்கியும் கையுமாக ஒரு ஆள் அங்கே ஓடிவந்தான். அவனைப் பார்த்தால் வேட்டைக்காரன் போல இல்லையே! அந்த இருட்டில் புலி வேட்டையாட வந்தானா என்றால் அதுவும் இல்லை.

சர்க்கஸ் கம்பெனியில் புலியை அடக்கி வேடிக்கை காட்டும் ‘ரிங் மாஸ்டர்’ தான்.

முதள் நாள் இரவு பேரூரில் நடந்த சர்க்கஸ் காட்சியில், யாருக்கும் அடங்காமல், அந்தப் புலி கூண்டுக்குள் இருந்த வேலைக்காரனைத் தாக்கிவிட்டு வெளியேறி வந்ததும், வேடிக்கை பார்த்த மக்கள் பதுங்கிக் கொண்டதும், மக்கள் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டும் என்று தண்டோரா மூலம் ஊரெல்லாம் அறிவித்திருந்ததும் நடேசனுக்குத் தெரியாது. தெரியவும் நியாயமில்லையே! அவர்தான், வைரக்கற்களை கடத்திக் கொண்டு போவதில் ஒரே குறியாக இருந்தாரே!