பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எண்ணி முடித்து, பொட்டலத்தை மடித்து வைத்த பிறகு, தனது எதிர்காலம் எவ்வளவு ஒளிமயமாக விளங்கப் போகிறது என்று நினைக்கும் பொழுதே, துரைசாமிக்கு தலைகால் புரியவில்லை. சினிமா வில்லன் போல சத்தம் போட்டுச் சிரித்து மகிழ்ந்தார். 'சர்க்கஸ் கூடாரத்தில், வெறி பிடித்த மிருகங்களுடன் போராடும் வேலையை விட்டுவிட்டு, இனி காரும் பேருமாக, சீரும் சிறப்புமாக சிங்கார வாழ்வு வாழப்போகிறேன்' என்று சத்தம் போட்டுப் பேசினார். இன்று நல்ல வேட்டை என்று வெடிச் சிரிப்பு சிரித்தார். , ു് o & آصے