பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

47


துரைசாமி கெஞ்சினார். ‘என்னை அவிழ்த்து விடுங்கள். நான் என் வழியே போய்விடுகிறேன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்’ என்று அழுது கொண்டே கேட்டார். கெஞ்சக் கெஞ்ச, அவர்களுக்குக் கோபம்தான் வந்தது.

‘எங்களை ஏமாற்றப் பார்கிறாயா? என்று இருவரும் களைத்துப் போகும் அளவுக்கு துரைசாமிக்கு, தங்களால் முடிந்தவரை உதை கொடுத்துவிட்டுப் போனார்கள். உதை வாங்கிய துரைசாமி, ‘மனிதனை மதிக்காமல், வெறும் வைரக் கற்களுக்கா குற்றுயிராக விட்டுவிட்டு வந்தேனே! அதற்கு இது சரியான தண்டனைதான்’ என்று அழத் தொடங்கினார்.

துரைசாமியின் அழுகைக் குரலைக் கேட்டாலும், திரும்பிப் பார்க்கக்கூட, அவர்களுக்கு விருப்பமில்லை. வைரமல்லவா மடியில் இருக்கிறது!

‘பேரூருக்குப்போய் வைரக் கற்களை விற்று, வரும் பணத்தை சரிபாதியாகப் பிரித்துக் கொள்வோம். இனி, சேற்றில் வேலை செய்கின்ற சின்னத் தொழிலையும், மீன்பிடிக்கும் மோசமான வேலையையும் விட்டுவிட்டு, கெளரவமாக ஒரு