பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
55
 

அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது படித்துத் தெரியாமலே கற்றுக் கொண்ட பண்பாடு.

ஆகவே, பாத்திரத்திற்குள்ளே பொட்டலத்தை மடித்துப் போட்டு, அதைத்தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக ஒடிக் கொண்டிருந்தாள். செல்வம் தேடிவந்திருக்கிறது என்று புரியாமலே பறந்தோடிக் கொண்டிருந்தாள்.

நான்கு ரோடு சந்திக்கும் இடம். அது பரபரப்பு நிறைந்த இடம். எதிரே லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மறுபுறம் ஐந்தாறு சைக்கிள் ஒட்டிகள் சேர்ந்தாற் போல் பேசியவாறு ஒட்டிக் கொண்டு வந்தனர். இன்னொரு புறம் வாடகைக்கு ஆள் ஏற்றும் குதிரை வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது.

ஆசையும், ஆவேசமும் விரட்ட ஓடிக் கொண்டிருந்த பத்மா, லாரியைப் பார்க்காமல் குறுக்கே ஓடி வந்தாள். லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டுவிடவே, லாரி கொஞ்ச தூரம் ஓடி குதிரை அருகிலே போய், பெருஞ்சத்தம் போட்டு நின்றது.

பயந்து போன குதிரை, ஒருபுறம் திரும்பிக் குதித்தது. லாரியைப் பார்த்து பயந்து, வண்டியின்