பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

பின்புறமாக ஓடிய பத்மாவை, திரும்பிய வண்டி திடீரென்று தாக்கியதும் அல்லாமல், தூக்கியும் எறிந்தது.

தலையைத் தாக்கியதால், ‘ஐயோ’ என்று அலறியபடி கொஞ்சதூரம் போய் தள்ளி விழுந்தாள் பத்மா, தலையிலிருந்த பாத்திரமும் தூக்கி எறியப்பட்டது. அலுமினியப் பாத்திரத்தின் உள்ளே இருந்த பொட்டலமும், பந்து போல மேலே பறந்து, அங்கே தூரத்தில் போய்க் கொண்டிருந்த ஒருவரின் கையிலிருந்த பைக்குள் சென்று விழுந்தது.

பொட்டலம் ஒன்று விழுந்தது என்றுதெரிந்ததும், பையைப் பிடித்திருந்த அந்த மனிதர், தன் தோள்மீதிருந்த துண்டை எடுத்து, பையை ‘லபக்’ கொன்று மூடிக் கொண்டு, தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

அதனுள் என்ன இருக்கும் என்று அவருக்கே தெரியாது. பின் ஏன் அப்படி மூடினார் என்றால், அதுதான் அவருடைய தனித்தன்மை.

அவரின் பெயர் அற்புதசாமி, அவர் பெயரைப் போலத்தான் ஆளின் குணமும், பெரிய கஞ்சன் என்று பேர் எடுத்தவர். வாழைப்பழம் தின்றால் வாழைத்தோலை வீசி எறிய அவருக்கு மனம்