பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
57
 

இருக்காது. அருகில் யாரும் இல்லாவிட்டால், அப்படியே தோலோடு விழுங்கி விடுவார். இல்லையேல், அவருக்குத் திருப்தியே இருக்காது.

அப்படி யாராவது பார்த்துக் கேட்டுவிட்டால், அதில் ருசி இல்லாமலா ஆடும்மாடும் அவ்வளவு சுவையாக ரசித்துச் சாப்பிடுகின்றன என்று எதிர் வினா போடுவார்.

வீதியில் எது கிடந்தாலும், காலால் எத்திப்பார்த்து விட்டால் தான், கொஞ்சமாவது மனதில் நம்மதி இருக்கும். வீதியில் கிடக்கும் வெற்று நெருப்புப் பெட்டியை எடுத்துப் பிரித்துப் பார்ப்பது அவரது பொழுதுபோக்கு, ஒரு முறை பத்து ரூபாய் நோட்டுடன் ஒரு தீப்பெட்டியைக் கண்டு பிடித்ததில் இருந்து, இப்படி ஒரு அசட்டு எண்ணம்.

பத்து பைசாவை செலவு செய்வதற்குள், பத்துத்தரம் யோசனை செய்வார். சின்னவயதிலேயே இலங்கை போய் அங்கே தங்கி விட்டவர். ஆனால் எப்பொழுதாவது தம் சொந்த ஊராகிய பேரூருக்கு வந்து போவார்.

இந்த முறை வந்து. இலங்கைக்குப் போகின்ற கெடுவும் முடிய இருந்தது. மறுநாள் புறப்படுவதாக இருந்ததால், அவர் கடைவீதிக்குச் சென்று,