பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

குப்பையைக் கிளறிய கோழி, சிலிர்த்து இறக்கைகளை விரித்து உலுக்குவதுபோல, உடலை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டார்.

அப்படியே வைரக்கற்களைக் கொண்டுவந்து முகத்திலும் கண்களிலும் ஒத்திக் கொண்டார். தழுவிக் கொண்டார். வாயார முத்தமிட்டார். சின்னக் குழந்தைபோல, அங்குமிங்கும் ஓடினார். ஆடினார், பாடினார். வீட்டிற்குள்ளேதான், வெளியிலே யாருக்கும் கேட்காமல் தான். அவர்தான் பேர் எடுத்தக் கஞ்சன் ஆயிற்றே!

வெளியே தெரிந்தால், தன் உயிரே போனதுபோல் தான் என்ற நினைவு வந்தவுடன், அவரைக் கவலை சூழ்ந்துகொண்டது.

தன் அப்பா அற்புதசாமி செய்கின்ற காரியங்கள் எல்லாம், சிறுவனுக்கு அதிக ஆச்சரியமாக இருந்தது. மின்னுகின்ற கற்களைப் பார்த்தான். மீன்போலத் துள்ளுகின்ற தந்தையைப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆடிப்பாடிய அப்பா, ஏன் அசையாமல் இப்பொழுது நிற்கிறார்?

இந்த வைரக்கற்களை இலங்கைக்கு எப்படி எடுத்துக் கொண்டுபோவது என்ற கவலையால்தான்