பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 7. யோசனையும் வாசனையும் அற்புதசாமி இரவில் சாப்பிடுவது இல்லை. இட்லி, தோசை, ஆப்பம் போன்ற பலகாரங்களைத்தான் மிகவும் விரும்பி இரவில் சாப்பிடுவார். அதற்குப் பெயர் விரதம் என்பார். தான் பெரிய பக்திமான் என்று பெருமையாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வார். அவரது தங்கையும் வந்து சாப்பிடுவதற்காக அழைத்தாள். எதிரே இட்லி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிட்டு வாயில் போட்டு சுவைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே, அவரது மனமும் திட்டம் போட்டுக் கொண்டே இருந்தது. யோசனை சிகரமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். மறுநாள் காலை, அவசரம் அவசரமாக எழுந்தார் அற்புதசாமி, சமையலறைக்குள் நுழைந்தார். அவரது தங்கை சிவகாமி, காலை ஆகாரமாக இட்லியை தயார் செய்து