பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
69
 

“எல்லாம் இந்தப் பையனால்தான் சார், பத்து நிமிடத்திற்கு ஒரு முறை பசி பசியென்று கத்தி, பாடாய் படுத்திவிடுவான். அந்த அட்டகாசத்தை அடக்கத்தான், இந்தப் பொட்டலம் கொஞ்சம் தாமதம் செய்தால்கூட, ‘கத்தோ கத்து’ என்று கத்தி ஊரையே கூட்டிவிடுவான். தாயில்லாத பையன். அதனால்தான் அதட்டாமல் வளர்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு இட்லியை எடுத்துப் பிட்டு, முருகனுக்கு ஊட்டினார்.

பையனும் கை கொட்டி சிரித்துக் கொண்டே, இட்லியை மிகவும் விருப்பத்துடன் உண்டான்.

வேடிக்கை பார்த்து நின்ற அதிகாரியும், தன் மகன் மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தில் நெஞ்சுருகிப் போனார். சிரித்துக் கொண்டே அற்புதசாமியைப் போகும்படி பணித்தார். பொட்டலத்தைக் கட்டிக் கொண்டு, மற்றவர்கள் இருக்கும் இடத்திற்குப் போனார். கப்பல் புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அற்புதசாமிக்கோ ஆனந்தம் தாங்க முடியவில்லை, வாயை விட்டு வெளியே வந்து