பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

75


நகைப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வருமாறு கூறினார். வந்ததும் அவசரமாக அவிழ்த்துப் பார்த்தார். சந்தேகப் பட்டது சரியாகவே போயிற்று.

வைரக் கற்களுக்குப் பதிலாக, வெறும் கண்ணாடியால் இழைக்கப் பெற்றது போன்ற வெள்ளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் தருமலிங்கம்.

“எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து நடேசனை இங்கே கொண்டு வாருங்கள். அதற்கு என்ன செலவானாலும் சரி, என் சொத்தே அழிந்தாலும் சரி சீக்கிரம் புறப்படுங்கள்” என்று தன் வேலைக்காரர்களை விரட்டினார் தருமலிங்கம்.

“நன்றி மறந்த துரோகியே! நடேசா! உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைத்த நீ உருப்படுவாயா? அம்பிகைக்குப் போட இருந்த வைரக்கற்களை, இப்படி அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டாயே! நீ நல்ல வாழ்வு வாழ்வாயா? உனக்கு நிம்மதிதான் கிடைக்குமா? என்று ஏதேதோ பேச அரம்பித்து விட்டார் தருமலிங்கம்.”

அவரது அருகில் வந்த கணக்கப்பிள்ளை, தான் கேள்விப்பட்ட சேதியை, தருமலிங்கத்தின்