பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

காதருகில் போய் ரகசியமாகச் சொன்னார். எதையோ யோசித்தபடி தலையசைத்துவிட்டு, தருமலிங்கம் வெளியே புறப்பட்டார். கூடவே கணக்கப் பிள்ளையும் ஓடினார். தருமலிங்கம் அவ்வளவு வேகமாக அல்லவோ போய்க்கொண்டிருந்தார்!

மீனாட்சிக்கு எதுவுமே விளங்கவில்லை. கவலையுடன் மெளனமாகக் கண் கலங்கியவாறே நின்றுகொண்டு இருந்தாள்.

வீட்டிற்குள்ளே, தான் மெளனமாக நின்றாலும் மீனாட்சியின் உள்ளம் அம்பிகையை நோக்கித் தொழுத வண்ணமாகத்தான் இருந்தது. ‘தேவி! எங்கள் பரம்பரை சொத்துக்களை உனது பாதார விந்தத்தில் சேர்க்கலாம் என்று. நான்தானே முதலில் நினைத்தேன்.’

அதையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லையே வாழ்வில் எதையுமே அடையக் கொடுத்து வைக்காத இந்தப் பாவியை மன்னித்துவிடு, எங்கிருந்தாலும், அந்த வைரக் கற்களைத் திரும்பப் பெற்று, என் பிரார்த்தனையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடு’ என்று குமுறும் நினைவுகளுடன் கும்பிட்டாள்.