பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அந்த ஊரிலே பெரும் பணக்காரராக இருப்பவர், நில புலம் நிறைந்தவராக வாழ்பவர் தருமலிங்கம். வாழவந்தபுரத்திற்கு முதன் முதலில் குடியேறிய குடும்பமும் அவருடையதுதான். குணத்திலே தருமர் போன்றவர். கடவுள் பக்தி நிறைந்தவர். பணம் இருந்தாலும் பகட்டோ, படாடோபமோ இல்லாதவர், பிறருக்கு மரியாதை தந்து பேசுபவர். திறமைக்கு மதிப்பளிக்கும் அரிய பண்பாளர். அவர், அழகும் அறிவும், அன்பும் அடக்கமும் நிறைந்த தன் மனைவி மீனாட்சியுடன் வாழ்ந்து வந்தார். வீடு, வயல், மாடு, மனை, கைநிறைய பணம் போன்ற எல்லா செல்வ வசதிகள் அவருக்கு இருந்தாலும், வீட்டிலே தவழ்ந்து விளையாட குழந்தைச் செல்வம் இல்லாமல் வாழ்ந்தது. அவர்களிருவருக்கும் பெரிய குறையாகவும் வேதனையாகவும் இருந்தது. - எவ்வளவோ வைத்தியங்கள் செய்தாயிற்று, எத்தனையோ வைத்தியர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்டுப் பார்த்தாயிற்று, போகாத கோயிலில்லை, முழுகாத குளமில்லை, மேற்கொள்ளாத நோன் பில்லை, எல்லாமே