பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

அவர்களிலே ஒருவர் அற்புதசாமியைப் பார்த்து, ‘பாவம் ! பையன் அழுகிறான்! உரைக்கட்டுமே! உரைத்தால் துப்பிவிடுகிறான்’ என்று சிபாரிசு வேறு செய்ய ஆரம்பித்தார்.

‘அவன் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது. அதிக காரம்’ என்று கூறிப் பார்த்தார்.

‘அது காரமா இருக்காது. அதுலதான் கல்கண்டு வச்சு சுட்டியேப்பா! அந்த இட்லி எப்படிப்பா உரைக்கும்!’ முருகன் சத்தம் போட்டுக் கூறினான்.

இட்லியில் கல்கண்டா?

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இட்லியில் கல்கண்டா! பையனைப் பார்த்து ஒருவர் கேட்டார்!

இருக்காதா அந்த இட்லிக்குள்ளே பாருங்க நிறைய கல்கண்டு இருக்குது எங்க அப்பா அதை எவ்வளவு ஆசையா வச்சுட்டாரு! தெரியுமா? பையன் மிகவும் அழகாக அப்பா செய்ததையெல்லாம் விளக்கமாக வருணித்துக்கொண்டே போனான்.

‘நேரமாகி விட்டது. எல்லோரும் புறப்படுங்கள்’ என்று சொல்ல வந்த சுங்க இலாகா சோதனை அதிகாரியின் காதில் 'இட்லியில்