பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடவுள் கைவிட மாட்டார் 81 கல்கண்டா என்று அந்த ஆட்களில் ஒருவரும் பையனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அந்த அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அற்புதசாமியை மட்டும் தனியாகக் கூப்பிட்டுத் தன் அறைக்கு அழைத்துக்கொண்டு போனர். தேகம் நடுங்கியவாறு, அற்புதசாமி அவரைப்பின் தொடர்ந்தார். - இட்லிகள் எல்லாவற்றையும் எடுத்து எடுத்து அந்த அதிகாரி விண்டு பார்த்தார். மிளகாய்ப்பொடி நிறைய துவப்பெற்ற இட்லிக்குள்ளே வைரக்கற்கள் இருப்பது தெரிந்தன. அற்புதசாமிக்கோ, மேற்கொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மயங்கியவர்போல, நாற்காலியில் சாய்ந்து விட்டார். முகதத்தில் தண்ணீர் அடித்தபோது, மயக்கம் தெளிந்து, எழுந்து உட்பார்ந்தார். கைக்கெட்டியது. வாய்க்கு எட்டவில்லையே என்று மனம் புழுங்கினார். வாயாடி மகனால் தன் எதிர்கால வாழ்வு பாழாகிப்போய்விட்டது என்று புலம்பினார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அற்புதசாமியின் பயணமும் தடுக்கப்பட்டது.