பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

வேகமாகப் புறப்பட்டார். தருமலிங்கத்தின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேம் புலி பின்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னதாகவே, இருவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நடேசனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில், நடேசனைப் போட்டிருந்த படுக்கையை நோக்கிப் போனார்கள். அங்கே போய் பார்த்தபொழுது, தருமலிங்கத்திற்கே மிகவும் மனக் கஷ்டமாக இருந்தது.

நடேசன் மருத்துவமனையில் இரண்டு காலை தூக்கிக்கட்டிய நிலையில் கிடப்பதைப் பார்த்தார்.

பதறி ஓடிப் போய் பார்த்தார் தருமலிங்கம், நின்று கொண்டிருந்த தருமலிங்கத்தின் கால்களைக் கட்டிப் பிடித்தவாறு படுத்தபடியே புலம்பினார் நடேசன்.

‘நான் செய்த துரோகத்திற்குத் தெய்வம் புலியைத் தாக்கச் செய்து சரியான தண்டனையைத் தந்து விட்டதுங்க! நம்பிக்கையுடன் தந்த நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிய இரண்டு கால்களையும் என்னால் அசைக்க முடியாது போயிற்று. எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்! என்று அழுதார் நடேசன்.