பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


‘இல்லாட்டி நான் இந்நேரம் செத்துப் போயிருப்பேங்க,’ என்று இன்னும் ஒருமுறை குலுங்கிக் குலுங்கி அழுதார் நடேசன்.

அவரை அழவிட்டு விட்டு, தருமலிங்கம் யோசனையில் ஆழ்ந்து போனார். வைரக்கற்கள் எங்கேபோயிருக்கும்? அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்னும் கேள்விகளே அவர் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தன.

இதோ பாருங்கய்யா! அந்தப் படுக்கையில் படுத்திருக்காரே ஒருத்தர்! அவர் பேரு துரைசாமி. சர்க்கஸ்ல ரிங் மாஸ்டராம். அவர் தாங்க என்கிட்டே இருந்து எடுத்திருக்காரு. அவரை அடிச்சு போட்டுட்டு அடுத்த படுக்கையில் கிடக்கிறாங்களே ரெண்டு பேர். அவங்ககொண்டு போயிட்டாங்க.

அவங்களுக்குள்ளே சண்டை, ரெண்டுபேரும் ஆத்தோட போனாங்க!

அப்போ, வைரக் கற்கள் ஆற்றோடு போயிட்டதா? என்று மிகவும் வேதனையுடன் கேட்டார்.

இல்லிங்க! அதை எடுத்துகிட்டு அந்தப் பொண்ணு ஓடியிருக்கா! அவளும் குதிரை