பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடவுள் கைவிட மாட்டார் 91 வண்டியிலமோதி, இந்த ஆஸ் பத்திரியில கிடக்குறாங்க! அதுக்கப்புறம் அந்தப் பொட்டலம் எப்படி போச்சுன்னுதாங்க தெரியலே. நடேசன் தான் செய்த தவறுக்கு வெட்கப்பட்டவராக தலையைக் குனிந்து கொண்டார். அவர் தலையணையை கண்ணிர் நனைத்துக்கொண்டிருந்தது. நடேசனைப் பார்த்துவிட்டு, அப்படியே பார்வையை அந்தப் பக்கம் செலுத்தினார். ரிங்மாஸ்டர் துரைசாமி படுக்கையில் கண்ணை மூடியபடிக் கிடந்தார். இரத்தம் உறிஞ்சும் அட்டை, அவரது ரத்தத்தை உறிஞ்சி விட்டது. அடிபட்ட மயக்கம், இரத்தம் இழந்த மயக்கம் மிகவும் களைப்புடன் காணப்பட்டார். 'உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் அவர் படுக்கையை விட்டு எழுந்திருக்க என்று பக்கத்தில் பேசிக்கொண்டார்கள். அதற்கடுத்த படுக்கை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவராகப் போட்டிருந்தார்கள். முத்தையாவும் ஏகாம் பரமும், தான் காலில் சேறுபட்டதற்காக கவலைப்பட்டவர்கள், வயிறு