பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கட கைவிட மாட்டார் 93 தெரியாமல் செய்த தவறுக்கு, தலையிலே பட்ட சிறு காயத்துடன் தப்பித்துக் கொண்டாள் பத்மா. பிச்சையெடுத்துப் பிழைக்கும் அவள் பிழைப்பை மாற்றி ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தருமலிங்கம் மனதில் உறுதி செய்து கொண்டார். மருத்துவ மனையில் முக்கியமான டாக்டரை சநதித்தார் தருமலிங்கம். அவர்கள் எல்லோரைப் பற்றியும் எடுத்துக் கூறினார். தான் வைரத்தோடு செய்யத் தொடங்கியதால் தான் இவ்வளவு பேரும் இப்படிக் கஷ்டம் அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னார். டாக்டர் அவருடைய நல்ல மனதைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொன்னார். இவர்களைப் பற்றி நீங்கள் கவலையே படவேண்டாம். அவர்களை ஒரு சில நாட்களிலே குணப்படுத்தி அனுப்பிவைத்து விடுவேன். உங்கள் வைரக்கற்களைப் பற்றித்தான் எனக்குக் கவலை, என்றார் டாக்டர். 'நான் வைரக்கற்களைப் பற்றி கவலையே படவில்லை டாக்டர். அது ஆண்டவனுக்காக் கொடுத்து விட நான் முடிவு செய்த அன்றே, அது கடவுளின் சொத்தாகி விட்டது. அதைக் கண்டு பிடித்துக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுபபு கடவுளின் பொறுப்பு என்னுடையதல்ல என்று