பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

பேசிய தருமலிங்கத்தின் கடவுள் பக்தியைக் கண்டு டாக்டர் ஆச்சரியமடைந்தார்.

வீட்டுக்கு வந்தார் தருமலிங்கம், வேகமாகப் போன தன் கணவன், இன்னும் வரவில்லை என்ன ஆனதோ தெரியவில்லையே என்ற கவலையில், வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள் மீனாட்சி. அவர் வந்ததைக் கண்டதும் தான் அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

தருமலிங்கம் அவசரப்படாமல், அதே சமயத்தில் கோபப்படாமல் எல்லா விஷயத்தையும் விவரித்தார்.

மீனாட்சிக்கோ எல்லாம் கனவு காண்பது போலவே தோன்றியது. இப்படியும் நடக்குமா உலகத்தில் என்று ஆச்சரியம் அடைந்தாள். இருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

சார், தந்தி!

தந்தி சேவகன் கொடுத்த தந்தியை, கையெழுத்து போட்டு பெற்றுக் கொண்டார் தருமலிங்கம்.

‘என்ன தந்திங்க’ என்று பயத்துடன் கேட்டாள் மீனாட்சி.