பக்கம்:கடவுள் பாட்டு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அறிவே மிக்க முன்னோரால்
ஐயன் என்னப் பெற்றவனே
பொறிகட் கெட்டா நுண்ணியனே
போற்றி உன்பொற் றிருவடியே!

3


என்றன் நெஞ்சத் தாமரையில்
இனிதுன் அடிவைத் தெழுந்தருள்வாய்
ஒன்றுந் துன்பம் வாராதே
உவந்து காக்கும் எம்பெருமான்!
நன்றுன் அடியைப் பிடித்தோர்க்கு
நன்மை யன்றித் தீதுண்டோ?
என்றும் உன்னைத் தொழுதிடுவேன்
இன்ப வாழ்வு பெருகிடவே!

4


பாலில் வெண்ணெய் உள்ளதுபோல்
பாரெங் கும்நீ பரந்துள்ளாய்!
பாலில் வெண்ணெய் கடைவதுபோல்
பக்தி யாலே உனையடைவேன்!
பாலில் வெண்ணெய் கடைந்தெடுக்கும்
பக்கு வத்தை யறியாதார்
பாலில் வெண்ணெய் இலையென்பார்
பக்தி யில்லார் உனைக்காணார்!

5


உலகம் முழுதும் உவந்தேத்தும்
ஒப்பில் தலைவ எனைக் காப்பாய்!
இலகும் ஒளிசேர் நற்பிழம்பே
என்னை என்றும் நீகாப்பாய்!
நலமே வடிவாய் உள்ளவனே
நாளும் என்னை நீகாப்பாய்!
மலரும் அன்பே உருவான
மன்னா என்றும் எனைக் காப்பாய்!

6