பக்கம்:கடவுள் பாட்டு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

பிறக்கு முன்னே இருட்குகையில்
பேச்சும் மூச்சும் அற்றிருந்தேன்
பிறந்த பின்னே ஒளிவெளியில்
பேச்சும் மூச்சும் பெற்றிருந்தேன்
பிறக்கச் செய்தாய் நீயென்றே
பெரிதும் உள்ளம் நொந்திருந்தேன்
பிறவித் துயரங் களைவையெனப்
பெரிதும் இன்பங் கொண்டேனே!

28


பாடு பட்டே அறியாதான்
பச்சை நெல்லைப் புல்லென்பான்
ஏடு தொட்டே அறியாதான்
எழுத்தைக் கிறுக்கல் என்றிடுவான்
ஒடுள்ளிருக்கும் பருப்பேபோல்
உயிருக் குயிராய் உள்ளுறைந்தே
ஆடும் பொருளே உனையறியான்
அனைத்தும் பொய்யென் றுரைத்திடுவான்.

29


இன்ப துன்ப மில்லாதாய்
எனினும் இனியார்க் கெந்நாளும்
இன்பந் தந்து துன்பத்தை
எளிதில் துடைக்க முன்வருவாய்!
அன்பில் லார்க்குன் அருளில்லை
அறிவில் லார்க்குன் ஒளியில்லை
அன்பும் அறிவும் உடையார்க்குன்
அருளை ஒளியைப் பெய்திடுவாய்!

30


அடியி லிருந்து முடிவரையில்
அனைத்தும் ஒருங்கு காத்தருளும்
முடிவி லாற்றல் உடையவனே
முழுமுத லாய பெருமானே