இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19
ஆடு கோழி பலியிட்டே
அறிவி லாதார் உன்னருளை
நாடித் தொழுமச் செயல்கண்டே
நடுங்கி நின்றேன்; மனந்துடித்தேன்
பாடிப் பாடித் தொழுதாலே
பலன ளிக்கும் பெருமானே
கூடி யுன்னை வேண்டுதற்கே
கொலையும் புலையும் வேண்டாமே!
42
எங்கள் தெய்வம் கதிகாட்டும்
எங்கள் வேதம் நெறிகாட்டும்
இங்கே வாரீர்; எம் சமயத்
திணைய வாரீர் எனவழைத்தார்.
எங்கள் தெய்வம் உங்களதென்
றேனோ பேசித் திரிகின்றார்
எங்கும் உள்ள பெருமானே
இவர்க்கும் அறிவை யருளாயோ?
43
தெய்வம் ஒன்றென் றெண்ணியபின்
சேரும் வழியும் ஒன்றன்றோ?
மெய்யாய் உன்றன் அடிபணிந்தால்
மேவும் இன்பம் பெரிதன்றோ?
பொய்யாய் மதங்கள் பலப்பல வாய்ப்
போற்றி யறிவைக் குழப்புவதேன்
ஐயா இந்தக் கலகமெலாம்
அணுகா தென்னைக் காத்தருள்வாய்.
44
நரகம் சேரா திருப்பதற்கே
நம்பன் அடியைச் சேருங்கள்
சிரம மின்றிச் சொர்க்கத்தில்
சேர்ப்பான் என்று விளம்பரங்கள்