பக்கம்:கடவுள் பாட்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

சூரைக் காற்றைச் சீறவிட்டாய்
துணையாய் மழையைப் பொழியவிட்டாய்
வேரைப் பறித்து மரஞ்சாய்க்கும்
வெள்ளப் பெருக்கை ஏவிவிட்டாய்
யாரைக் கோபித் தையாநீ
அழிவுச் செயலைத் தொடங்குகின்றாய்
பேரைச் சொல்லித் தொழுதேன் என்
பெருமா உலகைக் காத்தருள்வாய்!

56


உருளப் பெறுமோர் அலை கடலில்
உயரத் தொங்கும் சுருக்குதனில்
மருளைத் தரும்பல் நிகழ்ச்சியினால்
மனங்க சந்தே உயிர்விடுவார்
அருளைத் தருமுன் திருவடியை
அடைந்தால் அவர்தம் இதயத்தே
இருளைத் தருமோர் எண்ணமுமே
இறைவா சேரா தருளாயோ!

57

துன்பம் வந்த போதெல்லாம்
துணையாய் உன்றன் திருவடியை
அன்பாய்ப் பற்றிக் கொண்டார்க்குன்
அருளால் ஆறப் புரிவாய்நீ!
இன்பம் உற்ற போதெல்லாம்
இசைத்துப் பாடி உன்னடியை
அன்பாய்ப் பற்றி நிற்பார்க்குன்
அருளைக் குறையா தளிப்பாயே!

58

இமய மலையின் உச்சியிலே
இருக்கின் ருய்நீ என்றுரைத்தார்
குமரி முனையின் கோடியிலே
குறுகி உன்னை நான்கண்டேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/25&oldid=1201915" இலிருந்து மீள்விக்கப்பட்டது