பக்கம்:கடவுள் பாட்டு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அலையின் கடல்சூழ் உலகத்தே
அனைத்து யிர்க்கும் முதல்வன் நீ
தலைவ ணங்கித் தொழுதுன்றன்
தானை யடைவேன் என்பெருமான்.

73

கோடி கோடி யாய்ச்சேர்ந்த
கொள்ளைச் செல்வம் இருந்தாலும் ஆடிக் களிக்கும் ஆனந்தம்
அடையப் பெறுமோ எம்பெருமான்
கூடி உன்றன் திருவடியைக்
கும்பிட்டழுந்திக் கிடந்தினிது
பாடி மகிழும் இன்பந்தான்
பணத்தால் வருமோ பெருமானே.

74

கற்ற நூல்கள் ஆயிரமாம்
கல்விக் கடலென் பட்டமுமாம்
பெற்றுப் பயனென் எம்பெருமான்
பிழையாம் வழியிற் சென்றாலே
உற்றோர் ஏழை உன்தாளில்
உறுதி யாகத் தலைவைத்தால்
கற்ற கல்விப் பயனெல்லாம்
கடிதில் வந்து கிட்டாதோ?

75


அறிதற் கரியாய் என்றுன்னை

அறிஞர் பலரும் குறிக்கின்றார்

சிறியன் எனக்கோ நீ எளிதாய்த்

தெய்வக் காட்சி தருகின்றாய்

நெறியில் நின்று நல்லெணமே

நெஞ்சிற் கொண்டுன் திருவடியே

குறியாய்த் தொழுவார்க் கெந்நாளும்

கூடி மகிழும் கோமானே</poem>
67