30
நலங்கெட்டாரின் சேர்க்கையினை
நறுக்கும் துணைவன் ஆனாய்நீ
மலங்கெட் டிருக்கும் பெருமானே
மனங்கொண் டேனுன் திருவடியே?
80
உள்ள வயலில் அன்பென்னும்
ஒருவித் திட்டேன் எம்பெருமான்
வெள்ளக் கருணை மழைபொழிந்தே
வித்தைப் பெரிதாய் வளர்த்தாய்நீ
அள்ளி இன்பம் நுகர்கின்றேன்
யாவும் உன்றன் அருள்தானே
கொள்ளக் கொள்ளக் குறையாத
கோதில் இன்ப வடிவோனே.
81
கலகம் செய்து மத வெறியால்
கண்ணி ழந்தோர் கால்வலிக்க
அலைந்து லைந்து தேடிடினும்
அகப்ப டாத பெருமானே
உலகம் முற்றும் ஆளுகின்ற
ஒருபேரரசே உன்னடியே
விலக மனமற் றுள்ளேன்.நான்
வேண்டுவ தெல்லாம் அருள்கின்றாய்.
82
உன்றன் அடிமை ஆனபின்னே
உலக முற்றும் திரண்டாலும்
நின்றெ திர்க்கும் வலிபெற்றேன்
நெஞ்சின் அச்சம் பறக்கடித்தேன்
என்றும் நின்றன் திருவடியை
இனிக்கும் உறவாய்க் கொண்டவர்க்கே
ஒன்றும் இன்பம்; துன்பமெலாம்
ஒடி ஒழியும் பெருமானே!
83