பக்கம்:கடவுள் பாட்டு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

உடலில் முற்றும் வேல்குத்தி
உறுத்தும் துன்பத் தோடிருப்பார்
திடலில் நெருப்புக் குழி அமைத்துத்
திரிந்து நடப்பார்; உண்ணாமல்
அடமாய்க் கிடப்பார்; எல்லாமுன்
அருளை அடையும் வழியாமோ?
இடரைக் களையும் பெருமானே
இப்பா விகளைத் திருத்தாயோ?

84

தம்மைத் தாமே துன்புறுத்தித்
தலைவா உன்றன் கருணைபெறச்
செம்மை யற்றோர் முயல்கின்றார்
திருத்தி நல்ல அறிவளிப்பாய்
நன்மை தருமுன் திருவடியை
நாளும் வணங்கித் தொழுதாலே
பொய்ம்மை எண்ணம் போய்த்தொலையும்
பொன்றா இன்பம் வந்திடுமே!

85

அன்பு கொண்டுன் திருவடியை
அதுவே கதியென் றடைந்தோர்க்குத்
துன்பம் வந்தால் உடன்வந்து
துடைக்கும் அன்புப் பேரொளியே.
என்பின் வந்து நிற்கின்றாய்
என்றும் காவல் புரிகின்றாய்
இன்பக் கடலே என்னரசே
என்றும் உன்னைத் தொழுவேனே.

86


கூடி வணங்கும் அடியாரின்
கூட்டம் கண்டு,சிரிப்புடனே
ஆடி மகிழும்,பெருமானே
அன்பர் நெஞ்சக் கோயிலெலாம்