இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
அத்தை யல்தான் படுதுயரை
அளக்க லாமோ எம்பெருமான்
எத்த கைத்த துன்பெனினும்
இல்லா தொழிக்கும் உன்னருளே.
94
பச்சை மணியின் ஒளியோடு
பவள ஒளியும் ஒன்றாகி
இச்சைப் படுமோர் பேரொளியாய்
இன்பம் பாய்ச்ச வருதல்போல்
அச்சம் தவிர்த்து மனவுறுதி
ஆக்கந் தருமென் பெருமானே
துச்சம் துச்சம் துயரென்றே
சொல்ல வைத்தாய் அருளோனே.
95
மாதம் நோன்பு நோற்றவர்க்கும்
மனக்கண் ணில்நீ தெரிவதில்லை.
வேதம் கற்ற மேதைகட்கும்
வெளிபட் டேநீ வருவதில்லை,
காத காதம் தலந்தோறும்
கால்க டுக்க நடப்போர்க்கும்
ஆத ரிக்க வந்ததில்லை
ஐயா என்முன் வந்தாயே.
96
கொடுக்கும் பொருளால் உனைப்போற்றிக்
கோடிப் பெயர்கள் கூவிடினும்
படிக்கும் திறத்தால் துறைதோறும்
பரந்த நூல்கள் ஆய்ந்திடினும்
உடுக்கும் கடலை உடையாக
உலகின் முதல்வா உன்னருளைப்
பிடிக்கும் வாய்ப்பற் றிருந்தார்அப்
பேறு பெற்றேன் நான்தானே.
97