பக்கம்:கடவுள் பாட்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36



உறவா யுன்றன் திருவடியே
உறுதி யாகப் பற்றிநின்றேன்
அறமாம் நெறியே காட்டியெனை
அழைத்துக் கொள்வாய் பெருமானே!

101

அலுத்துக் களைத்த உடலுக்கே
அன்பாய்க் குளிர்ந்த நிழல் தருமோர்
வலுத்த ஆல மரத்தைப்போல் .
வாழ்விற் சலித்த போதுனது
நிலைத்த ஒளிசேர் திருவடியின்
நிழலைக் காட்டி எனையழைத்தாய்
பலித்த தென்றன் தவமென்றே
பாதம் பற்றிக் கொண்டேனே!

102

அருளே திரண்டோர் உருவான
அன்பு மலையே உலகத்தின்
இருளே பறக்கச் செயலாற்றும்
இன்ப ஒளியே மதமென்னும்
மருளே ஒழியப் பரவிவரும்
மாசில் அறிவே பரமென்னும்
பொருளே என்னை ஏற்பாயுன்
பொற்பா தத்து நீழலிலே.

103

அண்டர்.கோனே உன்னினும்மேல்
ஆன அரசர் யாருளரோ
கண்ட மன்றம் அனைத்தும் நீ
காணும் நீதிக் கடியன்றோ
தொண்டர் உள்ளத் தாமரையே
தூயோய் உனது பீடமெனக்
கொண்டாய் தேவா உன்னடியார்
கொண்ட நெறியே உயர்வன்றோ?

104
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/38&oldid=1202039" இலிருந்து மீள்விக்கப்பட்டது