பக்கம்:கடவுள் பாட்டு.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

என்னை யடிமை கொண்டாய்நீ
என்று பெருமை கொண்டிருந்தேன்
என்னுள் விருப்பம் எல்லாம் நீ
எளிதாய்ச் செய்து முடிக்கின்றாய்
உன்னைத்தொழுத தல்லாமல்
ஒன்றும் செய்ய வில்லைநான்
என்னைப் பெருமைப் படுத்துகிறாய்.
ஈசா இதனை மறவேனே.

105

தொன்னை சுழலும் வேகத்தில்
தொக்க நெய்யும்,விழலில்லை
என்னைச் சுழற்று கின்றாய்நீ.
யானும் உன்னைச் சேர்ந்ததனால்,
பின்னிக் கீழே விழவில்லை
பெரியோய் உன்றன் தாளுற்ற
என்னைக் கைவிட் டிடமாட்டாய்
எனக்குத் தெரியும் தெரியுமிதே!

106

அச்சந் தவிர்த்தென் வாழ்வினிலே
அன்பைப் பொழியும் என்தேவா
நச்சுக் குடமும் அமுதாகும்
நல்லோய் உன்னைத் தொழுவார்க்கே
பச்சைக் குழந்தை போலென்னைப்
பாது காத்து வருகின்றாய்.
இச்சைக் குரிய தாய்போலே
இருக்கும் உன்தாள் மறவேனே.

107


அன்பு வடிவம் நீயென்றார்
அன்பர்க் கன்பன் ஆனாய்நீ
இன்ப வடிவம் நீ யென்றார்.
இனிக்கும் தேனின் இனிதானாய்