பக்கம்:கடவுள் பாட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பொன்னின் வடிவம் நீயென்றார்
பொருளில் உயர்ந்த பொருளானாய்
என்னுள் ளத்தின் உள்ளரங்கில் .
இருக்கும் மேலோய் உனைத்தொழுதேன்.

108

எண்ணி உன்னைத் தொழுதடையும்
இயல்பில் லாத சிலரிங்கே
கண்ணில் லாத உடலெடுத்த
கடைகெட் டோரிற் கெட்டோராய்
புண்ணில் வடியும் சீழ்போலே
பொய்யாங் கருத்தை வளர்க்கின்றார்
மண்ணில் இவர்தம் உறவெனக்கு
வாயா வண்ணம் செய்தருள்வாய்.

109

அலையில் மிதந்து சென்றிடலாம்
ஆகாயத்தில் பறந்திடலாம்
நிலையில் லாத பிறஉலகும்
நேரில் கண்டு திரும்பிடலாம்
தொலையில் உள்ள பொருளெல்லாம்
தோன்றக் கண்டு களித்திடலாம்
கலையில் வல்லார் உனைமட்டும்
காண முடியா தெனைப்போலே!

110

கடலின் நீரின் ஆவியிலே
கருமே கத்தை உருவாக்கி
திடலில் மழையாய்ப் பொழிவித்தாய்
செடியும் கொடியும் தழைத்தனவே
நடவும் தொழிலும் நடந்திடவே
நல்கு மழையில் உன்கருணை
வடிவைக் கண்டு தொழுதேற்றி
வணங்கி நின்றோம் பெருமானே.

111
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/40&oldid=1202706" இலிருந்து மீள்விக்கப்பட்டது