பக்கம்:கடவுள் பாட்டு.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40குந்திச் சோறு பொறுக்கியுனும்
கூட்டக் காகம் மேட்டில்பார்
முந்தி உலகைப் படைத்தளித்த
முதல்வா உன்முன் என்னைப்பார்!
115

காசி சென்று தொழுதாலும்
கங்கை முழுகி வந்தாலும்
நேச மற்றோர் இதயத்தே
நிற்ப தில்லை ஈசாநீ
வாசம் செய்யும் இல்லத்தே
வணங்கும் அன்பர் உள்ளத்தே
தேசு மிக்க பொற்பாதம்
தேடி வரும்பே றுண்டாமே!
116

இல்லை யென்று சொன்னவர்கள்
இருக்கின் றாயென் றுரைத்தார்கள்
நல்லோ ரானார் எனநானும்
நம்பிக் கொண்டேன் எம்பெருமான்
எல்லாங் காசுக் காகத்தான்
என்று பின்னே கண்டறிந்தேன்
வல்லாய் உன்றன் மெய்கூட
வஞ்ச கத்தின் துணையாச்சே.
117

நம்பித் தொழுவார் பலரோடு
நானும் கோயில் சென்றிருந்தேன்.
கம்பி யடைப்பின் வெளிநின்றேன்
கண்டேன் அங்கோர் பெருங்கூட்டம்
கும்பிட் டெழுந்தார் காயுடைத்தார்
குருக்க ளுக்குப்பணங்கொடுத்தார்
வெம்பித் திரும்பி வந்தேன்நான்
வெளியில் உன்னைக் கண்டேனே,
118