பக்கம்:கடவுள் பாட்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

கூவிக் கூவி யார்ப்பரித்தார்
கும்பிட் டெழுந்தார் காயுடைத்தார்
பாவி மக்கள் எதைக்கண்டார் .
பணத்தைக் கொடுத்தார் பூச்சொரிந்தார்
தேவா உன்னைக் காணாதே
சிந்தை நிறைந்து வெளிவந்தார்
ஆ ஆ! எல்லாம் பொய்வேடம்
ஐயோ ஈசா எனைக்காப்பாய். 119

இறைவா உன்னைக் காட்டுவதாய்
எவனோ சொன்னான் அதைநம்பி
மறைவாய் வாழும் அவன்குகைக்கு
மக்கள் சென்றார் பணங்குவித்தார்
உறைவாய் அன்பர் உள்ளத்தென்
றோதும் மொழியை யுணராமல்
இரையாய்ப் போனார் வஞ்சகத்திற்
கிவைதாம் என்ன விளையாட்டோ? 120

ஐயா உன்னைக் கண்டேன்நான்
அன்பாம் அமுதைக் குடித்தேன்நான்
மெய்யாய்ச் சொன்னால் இன்னும்என்
மேலாம் ஆசை தீரவில்லை.
உய்யக் கொள்ளும் உன்னடியில்
ஒடுங்கி யிருந்து நொடிதோறும்
பெய்யும் அமுதை உண்டிருக்கப்
பெரிதும் ஆசை கொண்டேனே. 121

உள்ளம் என்னும் சிற்றறையில்
ஒடுங்கி வந்து நீயிருந்தாய்
வெள்ளம் நிறைந்த குளம்போல
வெளியில் லாமல் உளமுழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/43&oldid=1208894" இலிருந்து மீள்விக்கப்பட்டது