43
இழிவாம் மனத்தின் வயப்பட்டே
எண்ணின் நாணம் மிகவிளைக்கும்
பழியும் பாவச் செயலும்தான்
பண்டு புரிந்தேன் எம்பெருமான்
எழிலும் ஒளியும் மிகவுடைய
இனிய அடிவைத் தெனதுளத்தே
அழியாப் பொருளே வந்தமர்ந்தாய்
யானும் தூயேன் ஆனேனே.
126
நிலையில் லாத பொருளெல்லாம்
நிலைக்கும் என்று நினைத்திருந்தேன்
அலையில் நீந்தி ஆனந்தம்
ஆகத் திரிந்த மீனெல்லாம்
வலையில் சிக்கி மாய்ந்ததுபோல்
வாழ்வு சாவிற் சிக்கியதே.
தலைவா உன்றன் தாளொன்றே
தங்கும் என்று பணிந்தேனே.
127
வாழ்வைத் தேய்த்துக் காலமெனும்
வண்டி உருண்டு போகுதையா
ஏழு குதிரை பூட்டியதாம்
இந்த வண்டி தனை நிறுத்த
ஆளும் இல்லை வழியுமிலை
யாவும் தேய்ந்து மாயுதையா
பாழாம் அந்தப் பாதையிலே
பரமா என்னைக் கிடத்தாதே!
128
எங்கும் நிறைந்த பெரும்பொருளே
இறையே உன்னைத் தொழுததன்பின்
எங்கோ சந்து பொந்துகளில்
இருப்பதாகப் பிறருரைக்கும்