பக்கம்:கடவுள் பாட்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பொறுக்கும் மனமும் அன்புணர்வும்
பொருந்து மனைவி ஒருத்திதனை
மறுக்கும் அல்லேன் பிறமாதர்
மையல் வேண்டேன் பெருமானே! 136

ஈயும் கொசுவும் வளையெலியும்
எறும்பும் பாம்பும் கொடுந்தேளும்
பாயும் கெட்ட சொறிநாயும்
பரவிக் கிடக்கும் சாக்கடையும்
வாயும் சுற்றுப் புறமெனினும்
வாழ்வேன் அங்கே எம்பெருமான்
தூய இடமாய் மாறாதோ
துணை நீ செய்ய வந்துவிட்டால்! 137

மன்னும் உன்றன் அருள்வெள்ளம்
மாந்திக் களிக்க நினைப்போர்க்குப்
பொன்னும் பொருளும் போலேநான்
பொருந்தி உதவி செய்திடுவேன்
பின்னும் பின்னும் வழங்கிடினும்
பெருகி வழியும் திருவருளை
உன்னும் அவர்கள் எய்துவதால்
ஊறொன் றில்லை பெருமானே.
138

உன்னை வணங்கி உன்னடியே
ஒன்றிக் கிடக்கும் திருத்தொண்டர்
என்னை நாடி வருவாரேல்
எலும்பு தேயத் துணைபுரிவேன்
பொன்னைத் தெய்வம் போல் மதித்துப்
போற்றா துன்னைத் திரிவாரைச்
சின்ன துரசாய்க் கருதிடுவேன்
சேரேன் அவரோ டெம்பெருமான்.

139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/48&oldid=1212482" இலிருந்து மீள்விக்கப்பட்டது