பக்கம்:கடவுள் பாட்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

புதிதாகப் பிறந்த குழந்தை, தொட்டிலிலே கிடந்து வீட்டு முகட்டைப் பார்த்தபடி சிரிக்கிறது. அது சிரிக்கும் போது தோட்டத்துப் பச்சை இலைகளுக்கு நடுவே பூத்துக் குலுங்கும் மலர்போல ஒரு ஒளி வீசுகிறது. அந்தக் குழந்தை யாரைப் பார்த்துச் சிரிக்கிறது என்று கேட்டால், அதன் அன்னை என்ன பதில் சொல்லுகிறாள்.

அது
கடவுளோடு
பேசிச்
சிரிக்கிறது.
என்று கூறுகிறாள்.

இது உண்மையோ, தாயின் அன்பு மனத்தில் பிறந்த அழகிய கற்பனையோ தெரியாது. ஆனால், அந்தச் சிரிப்பிலே ஒர் ஒளி-தெய்வீக ஒளி-பார்ப்பவர் நெஞ்சைப் பறித்திழுக்கும் அன்பு ஒளி இருக்கிறது என்பதுமட்டும் உண்மையான உண்மையே தான்.

உலகில் மனிதனுக்குப் புரியாததெல்லாம் கடவுள் செயலாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், மனிதன் எவ்வளவுதான் அறிவு மேம்பட்டவனாக வளர்ந்தாலும் அந்த அறிவு மேம்பாட்டைக் கடந்த அறியாமை இருக்கத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/5&oldid=1201945" இலிருந்து மீள்விக்கப்பட்டது