பக்கம்:கடவுள் பாட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


உண்ணும் உணவில் விருப்புற்றே
ஒடிப் புதிது புதிதாக
உண்ணத் தலைப்பட் டந்நினைப்பே
உடையார் நெஞ்சைக் கடையாக
எண்ணிப் பேசா திருந்தாயோ
என்றன் இறைவா உன்னடியின்
வண்ண அமுதை யல்லாமல்
வாரி யுண்ண நினையேனே.
147
பூவும் புகையும் பொடிகளும்மேற்
பூச்சும் தருமவ் வாசத்தே
யாவும் இன்பம் உள்ளதென
ஆசை யோடு நேசிப்பார்
மேவும் இடத்தை வெறிதென்றே
விட்டு விட்டாய். நானோ என்
தேவா உன்றன் அடிமலரின்
திரும ணத்தை உயிர்ப்பேனே.
148
கண்ணுக் கினிய பெண்களையே
காமுற் றவர்பின் ஓடிடுவார்
எண்ணந் தன்னில் சிறிதிடமும்
ஏற்க மறுத்தாய் என்னிறைவா
மண்ணும் விண்ணும் காத்தளிக்கும்
மன்னன் உன்றன் தோள்சேர்ந்து
நண்ணும் இன்பம் தனையன்றி
நான்வே றெதுவும் நாடேனே!
149
சிந்தித் துன்னைத் தொழுதிடவே
சிறிதும் விருப்பம் இல்லாமல்
நிந்தித் திருப்பார் உள்ளத்தை
நீயும் வெறுத்து விட்டாயோ?

ー4ー

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/51&oldid=1211751" இலிருந்து மீள்விக்கப்பட்டது